செப்டம்பர் 12 (லீப் வருடங்களில்) அல்லது 13 (சாதாரண வருடங்களில்) உலக மென்பொறியாளர் தினமாக கொண்டாடப்படுகிறது.
இன்றைய நவீன உலகின் மகத்தான கண்டுபிடிப்புகளில் ஒன்று கணிப்பொறி. அந்த கணிப்பொறி இயங்குவதற்கு தேவையான செயல் திட்டங்களை எழுதி அதில் உள்ளீடு செய்பவர்கள் மென்பொறியாளர்கள்.
நமது வாழ்க்கையிகள் அவர்கள் கொண்டு வந்திருக்கும் நேர்மறையான முன்னேற்றங்களை கவுரவிக்கும் பொருட்டே இந்த தினம் கொண்டாடப்படுகிறது.
உலக மென்பொறியாளர்கள் தினம் முதன் முதலில் கொண்டடாடப்பட்டது 2002 ஆம் ஆண்டில்.ஆனால் அதிகாரப்பூர்வமாக உலக மென்பொறியாளர்கள் தினம் அமல் செய்யயப்பட்டது 2007-ஆம் ஆண்டிலிருந்துதான்.
இந்த தினமானது பெரும்பாலான நாடுகளில் கொண்டாடப்பட்டாலும், இந்த தினத்திற்கு என்று விடுமுறை அளித்து சிறப்பித்திருப்பது ரஷ்யாவில் மட்டும்தான்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.